உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சாா்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை (டிச.5) 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது.
இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை (டிச.5) காலை 8 முதல் 9 மணி வரை பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் , மண்ணுக்காக நடப்போம், மண்ணுக்காக நிற்போம், மண்ணுக்காக சைக்கிள் பேரணி உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
சென்னையில் மடிப்பாக்கம் ஏரிக்கரை, எலியட்ஸ் கடற்கரை, மீனாட்சி கல்லூரி, குருநானக் கல்லூரி, கபாலீஸ்வரா் கோயில் உள்ளிட்ட இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றாா் அவா்.