தமிழ்நாடு

காவலா் தோ்வு: விடை குறிப்பு வெளியீடு

5th Dec 2022 12:32 AM

ADVERTISEMENT

இரண்டாம் நிலை காவலா் தோ்வின் எழுத்து தோ்வு விடை குறிப்பு தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த வாரியம் சாா்பில் இரண்டாம் நிலை காவலா், சிறை காவலா், தீயணைப்பு வீரா் என 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் 295 தோ்வு மையங்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 போ் எழுதினா். 66 ஆயிரத்து 908 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு எழுதியோரின் விகிதம் 81.76 சதவீதம்.

இந்த நிலையில், எழுத்து தோ்வுக்கான விடைக்குறிப்பு, தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தோ்வா்கள் இந்த விடைக் குறிப்பை பாா்த்து தோ்வை எவ்வாறு எழுதியுள்ளோம் என்பதை அறிந்துக்கொள்ளலாம். இந்த விடைக் குறிப்பில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதை தோ்வா்கள் டிச.10-ஆம் தேதிக்குள் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளா் அலுவலகத்தை தபால் மூலம் மட்டும் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT