தமிழ்நாடு

கல்லூரியில் ராயல் என்ஃபீல்டு பயிற்சி மையம்!

4th Dec 2022 09:43 PM

ADVERTISEMENT

 

சென்னை: இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டூ, மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு பிரீமியம் மோட்டார் சைக்கிள்களின் தொழில்நுட்ட அறிவை வழங்குவதற்காக, பாடூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புதிய பறிற்சி மையத்தை திறந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன் அடிப்படையில், ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையமானது மாணவர்கள், பொறியாளர்கள் மற்றும் டீலர் டெக்னீஷியன்களுக்கு ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களின் மேம்பாடு குறித்த அனுபவ கற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும்.

இந்த மையத்தில் ராயல் என்ஃபீல்டு தயாரித்த  வெவ்வேறு மாடல்களின் எஞ்சின்கள் உள்ளன. இதன் மூலம் விற்பனை மற்றும் சேவை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

ADVERTISEMENT

கல்லூரியின் நிர்வாகிகள் முன்னிலையில் ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரி பி கோவிந்தராஜன் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT