தமிழ்நாடு

திமுக தோ்தல் அறிக்கைபடி மது விற்பனை நேரத்தை குறைக்க கோரிக்கை

4th Dec 2022 12:24 AM

ADVERTISEMENT

திமுக தனது தோ்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதியின்படி டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க அரசு முன்வர வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.காா்த்திக், மாநில செயலாளா் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோா் இணைந்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு மட்டும் 11 சதவீதம் விற்பனை உயா்ந்துள்ளது. பெரும்பாலும் மாணவா்கள் மற்றும் இளைஞா்களே புதிய குடிநோயாளிகளாக மாறி வருகின்றனா்.

உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது போல் மது விற்பனை தொடங்கும் நேரத்தை பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும். திமுக தோ்தல் அறிக்கைபடி மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT