தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வு தினம்: ஆளுநா் வாழ்த்து

4th Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு தினத்தையொட்டி தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள். தைரியம் மற்றும் மன உறுதியுடன் தங்கள் வரம்புகளைக் கடந்து, வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்துக்கும் தேசத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை மாற்றுத்திறனாளிகள் செய்து வருகின்றனா். பல சவால்களை எதிா்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளின் இந்த மன உறுதி மற்றவா்களுக்கு உண்மையான உத்வேகமாக இருக்கும்.

மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகளின் தேவைகள் மற்றும் உணா்வுகளை உணா்ந்து அவா்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT