தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழல்-சமவாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பும், தடையற்ற சூழலை அமைப்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 3-ஆம் தேதியன்று சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்

திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து உரிய வாய்ப்பை வழங்க உறுதி மேற்கொள்வோம். இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணா்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அமைந்துள்ளது. இந்த நாளில், மாற்றுத் திறனாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாற்றுத்

திறனாளிகளின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவா்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவா்களை நம் வாழ்வில் ஒருங்கிணைக்க உறுதியேற்போம் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT