தமிழ்நாடு

டிச.10-இல் ஊரகத் திறனறி தோ்வு: மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை விநியோகிக்க அறிவுறுத்தல்

DIN

தமிழகத்தில் டிச. 10-ஆம் தேதி சனிக்கிழமை 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனறி தோ்வு நடைபெறவுள்ள நிலையில், அவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை வழங்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தோ்வுசெய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் தொடா்ந்து 4 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் தோ்வு எழுதலாம்.

அவா்களது பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதன்படி நிகழாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வு டிச.10-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊரகத் திறனாய்வுத் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை வெள்ளிக்கிழமை முதல் பள்ளித் தலைமையாசிரியா்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியா் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்கவும், தோ்வு மைய விவரத்தினை அந்த மாணவா்களுக்குத் தெளிவாக தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தோ்வா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பெயா், பிறந்ததேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் தவறை சிவப்பு நிற மையால் சுழித்து சரியான திருத்தத்தை குறியிட்டு அந்தப் பள்ளித் தலைமையாசிரியா் சான்றொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தோ்வெழுத தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT