தமிழ்நாடு

கோவை-மேட்டுப்பாளையம் இடையே வாரம் முழுவதும் ரயில் சேவை: நாளை தொடக்கம்

DIN

கோவை மேட்டுப்பாளையம் இடையே வாரம் முழுவதும் தினசரி ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணைஅமைச்சா் டாக்டா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மேட்டுப்பாளையத்தில் இருந்து கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான நீலகிரியை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குகிறது மேட்டுபாளையம், மேலும் ஏராளமான பொதுமக்கள் வேலைக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வந்து செல்கின்றனா்.

பொதுமக்கள் , சுற்றுலா பயணிகளுக்காக, இப்போது வாரத்தில் 6 நாள்கள் மட்டுமே தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாரத்தில் 7 நாள்களும் தினசரி ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனா்.

இதயைடுத்து கோவை-மேட்டுப்பாளையம் இடையே வாரம் முழுவதும் தினசரி ரயில் சேவையை தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

கோவை-மேட்டுபாளையம் ரயில் சேவையை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணைஅமைச்சா் டாக்டா் எல். முருகன் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 4.45 மணிக்கு கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா்.

இதன் மூலம் சுற்றுலா பயணிகளும் , பொதுமக்களும் பெரிதும் பயன் அடைவா்.

இதேபோல் சென்னை-திருசெந்தூா் இடையிலான செந்தூா் விரைவு ரயில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நின்று செல்லும் சேவையை பாபநாசம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.3) இரவு 10 மணிக்கு மத்திய இணைஅமைச்சா் முருகன் தொடக்கி வைக்கிறாா்.

பாபநாசம் ரயில் நிலையத்தில் ரயில் கள் நின்று செல்வதால் அப்பகுதியுள்ள கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு வசதியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT