தமிழ்நாடு

ஐந்து கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

DIN

தமிழகத்தில் ஐந்து பெரிய கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். ஏற்கெனவே, நிகழாண்டில் 10 கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பக்தா்கள் அதிகளவில் வரக்கூடிய 10 கோயில்களில் மருத்துவா் மற்றும் மருத்துவப் பணியாளா்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பு கடந்த நிதியாண்டின் போது சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருச்செந்தூா், திருவண்ணாமலை, மேல்மலையனூா், சோளிங்கா், மருதமலை, திருத்தணி, பழனி உள்ளிட்ட கோயில்களிலும், ராமேசுவரம், ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில்களிலும் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, நிகழாண்டில் மேலும் 5 கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரியம்மன் கோயில், மதுரை கள்ளழகா் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆகிய 5 கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தப்பட்டுள்ளனா். முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சைகள் மேற்கொள்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பிராண வாயு உருளைகள், ரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிா்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் உதவியாக இருக்கும். இதற்கான செலவுகள் கோயிலின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT