தமிழ்நாடு

இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை... மழை

DIN


சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை அங்கென்றும் அங்கொன்றுமாக திடீரென மழை கொட்டியது.

சென்னைக்குள்ளேயே இருந்து கொண்டு செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டவர்கள் எங்கள் ஊரில் மழை வெளுத்து வாங்குகிறது என்று சொல்ல, மறுமுனையில் எங்கள் ஊரில் வெயில் அல்லவா வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது போன்ற பேச்சுகளைக் கேட்க முடிந்தது.

வெயில் அடிக்கும் போது தமிழ்நாடு வெதர்மேன் சொன்னதைக் கேட்டு குடை எடுத்துக் கொண்டு சென்றவர்களை வீட்டில் இருந்தவர்களும் வெளியில் பார்த்தவர்களும் கேலி செய்திருந்தாலும் மனம் தளராமல் குடையுடன் சென்றவர்கள் திடீரென பெய்த மழையில் நனையாமல் தப்பித்திருக்கலாம்.

மற்றவர்கள், அண்மையில் சென்னை மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது கீழே சாலையில் சிக்னலுக்காக காத்திருந்தவர்கள் மேல் மேம்பாலத்தில் தேங்கியிருந்த நீர் அபிஷேகம் செய்துவிட்டுச் சென்ற விடியோ வைரலாகப் பரவியது. அதுபோலத்தான் குடை எடுத்துச் செல்லாதவர்களின் நிலையும் மாறியது.

இதெல்லாம் சொல்லி முடிந்த கதை. தற்போது அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், தமிழகத்தில் இன்று மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி, கடலூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இன்னும் 6 நாள்கள் உள்ளன. ஆனால், அது நன்றாகவே உருவாகிவருகிறது. அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து கடலூர்/ நாகை முதல் சென்னை / நெல்லூர் இடையே தமிழக கடற்கரையை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் நகரும் தன்மையை கண்காணித்ததில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய மழையை காண முடியாமல் போகலாம் என்றே கூறலாம்.

உருவாகி வரும் சக்கரம் குறித்து கண்காணிக்க போதிய நேரம் இருக்கிறது. டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் மழை தீவிரமாக இருக்கும் என்று தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT