தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து விலகுகிறேன்: கோவை செல்வராஜ் அறிவிப்பு

3rd Dec 2022 07:37 PM

ADVERTISEMENT

அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். 
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் சமீபகாலமாக தீவிரமடைந்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டாக பிரிந்துள்ளது. 
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் தொடர்ந்து செயல்பட வேண்டாம் என முடிவுவெடுத்துள்ளளேன். அதேசமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், நல்ல முடிவு விரைவில் எடுப்பேன், ஒருநாளும் அரசியலை விட்டு விலகமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க- வண்டலூர் அருகே கயிறு அறுந்து விழுந்ததில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் சாவு

அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று கோவை செல்வராஜின் அறிவிப்பை தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், கோவையில் 4 புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT