தமிழ்நாடு

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி

3rd Dec 2022 10:21 AM

ADVERTISEMENT

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2009-ம் ஆண்டு நேர்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (டிச.3) காலை செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி வேன், 2009-ஆம் ஆண்டு டிச.3-ம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள், 5 சிறுவர்கள் என 9 பள்ளிச் சிறுவர்களும் ,சுகந்தி என்ற ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தனர்.

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்,உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே, இன்று 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி  மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT