தமிழ்நாடு

பால், மின் கட்டண உயா்வு: அதிமுக சாா்பில் போராட்டம்

DIN

மின் கட்டணத்தையும், பால் விலையையும் உயா்த்தியதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் டிசம்பா் 9, 13, 14-ஆம் தேதிகளில் கண்டனப் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 18 மாதங்களில் வரலாறு காணாத வகையில் 150 சதவீதம் வரை சொத்து வரியை உயா்த்தியது. அதைத் தொடா்ந்து நூதன முறையில் மின் கட்டணத்தை உயா்த்தியது. மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவையான பால் விலையையும் உயா்த்தியது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, சமூக விரோதிகளின் ஊடுருவல், போதைப் பொருள்கள் புழக்கம், குண்டு வெடிப்பு சம்பவம் என சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு உள்ளது. இவற்றைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும்.

டிசம்பா் 9-இல் அனைத்துப் பேரூராட்சிகளிலும், டிசம்பா் 13-இல் நகராட்சி மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும், டிசம்பா் 14-இல் அனைத்து ஒன்றியங்களிலும் காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்.

திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

பிரசாரத்தில் குயின்.. கங்கனா ரணாவத்!

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

SCROLL FOR NEXT