தமிழ்நாடு

டிச. 7ல் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

3rd Dec 2022 09:26 AM

ADVERTISEMENT

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிச. 5-இல் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என்றும் பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து டிச. 8-ஆம் தேதியை ஒட்டி தமிழக - புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT