தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்!

3rd Dec 2022 11:05 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிச.8-ம் தேதியை ஒட்டி வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

ADVERTISEMENT

படிக்க: 40 ஆயிரத்துக்குக் குறையாத ஒரு சவரன் தங்கம்!

இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags : மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT