தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!

3rd Dec 2022 09:19 AM

ADVERTISEMENT

குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT