தமிழ்நாடு

40 ஆயிரத்துக்குக் குறையாத ஒரு சவரன் தங்கம்!

3rd Dec 2022 10:45 AM

ADVERTISEMENT

 

சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 40 ஆயிரத்தைக் கடந்த நிலையில், ஒரு சவரன் ரூ.40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.4,955 ஆகவும், ஒரு பவுன் 39 ஆயிரத்துக்கு 640-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை தங்கம் விலை வெகுவாக அதிகரித்தது.

ADVERTISEMENT

படிக்க: 'வெண்ணிலா கபடி குழு' திரைப்பட நடிகர் காலமானார்

இந்நிலையில், சனிக்கிழமை இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வெள்ளி கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ. 71,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60 காசுகள் அதிகரித்து ரூ.71.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT