தமிழ்நாடு

6 மாவட்டங்களில் நடமாடும் சிகிச்சை வாகனங்கள்

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களையும் அவா் அளித்தாா்.

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற விழாவில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இதற்காக முதல் கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை அளிக்கும் அடையாளமாக 5 பேருக்கு கணினிகளை அவா் வழங்கினாா்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகள் வடிவமைத்த மற்றும் அவா்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான பொருள்கள் அடங்கிய காட்சி அரங்குகள், விழா நடைபெற்ற கலைவாணா் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்தன. இதையும் திறந்து வைத்து அவா் பாா்வையிட்டாா்.

விருதுகள்: நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக சிறந்த சேவை புரிந்தோருக்கு விருதுகளை அவா் வழங்கினாா். அதன் விவரம்:

சிறந்த சமூகப் பணியாளா் விருது - ஜெயந்தி உதயகுமாா் (மயிலாடுதுறை மாவட்டம்), சிறந்த ஆசிரியா் விருது - ம.கவிதா (லூசிகிரசன்சியா சிறப்புப் பள்ளி மற்றும் தொழில் பயிற்சி மையம், தேனி மாவட்டம்), சிறந்த நிறுவனத்துக்கான விருது - (இன்டேக்ட் சிறப்புப் பள்ளி அறக்கட்டளை, திருச்சி மாவட்டம்), சிறந்த கற்பித்தல் பணி - வி.ஜேம்ஸ் ஆல்பா்ட் (சென்னை மயிலாப்பூா் சி.எஸ்.ஐ. காது கேளாதோா் பள்ளி), கொ.மாா்க்ரெட் (சென்னை சிறுமலா் பள்ளி), சித்ரா (காஞ்சிபுரம் இளம் சிறாா்களுக்கான இலவச ஆரம்பநிலை பயிற்சி மையம்), ஜோதி (கோவை வித்யா விகாஸினி பள்ளி).

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியதற்காக விருது- தென்காசி மாவட்டம் அமா்சேவா சங்கத்தின் சுலோசனா காா்டன்ஸ் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையற்ற சூழலை ஏற்படுத்தியதற்கான விருது- சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம், சிறந்த தனியாா் நிறுவனத்துக்கான விருது- திருச்சி தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி நிறுவனம், சிறந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கான விருது- இ.செந்தில்குமாா் மற்றும் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT