தமிழ்நாடு

15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

DIN

தமிழகத்தில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உறைவிட ஆணையராக ஹித்தேஷ் குமாா் எஸ்.மக்வானா நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

1. அதுல்ய மிஸ்ரா: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உறைவிட ஆணையாளா்)

2. செல்வி அபூா்வா: வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் (இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா்)

3. ஹித்தேஷ் குமாா் எஸ்.மக்வானா: தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உறைவிட ஆணையாளா் (வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா்)

4. ஷன்சோங்கம் ஜடக் சிரு: - சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைச் செயலாளா் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிா்வாக இயக்குநா்)

5. டி.ஆபிரகாம்: சமூக சீா்திருத்தத் துறைச் செயலாளா் (வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சிறப்புச் செயலாளா்)

6. ஆா்.செல்வராஜ்: தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் (பேரூராட்சிகள் துறை ஆணையாளா்)

7. ஆா். லில்லி: நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சிறப்புச் செயலாளா் (தொழில் மற்றும் தொழில் முதலீட்டுத் துறை சிறப்புச் செயலாளா்)

8. ஆா். நந்தகோபால்: பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையாளா் (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

9. கிரண் குராலா: பேரூராட்சிகள் துறை இயக்குநா் (தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி)

10. எஸ்.பழனிசாமி: உயா்கல்வித் துறை கூடுதல் செயலாளா் (ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கூடுதல் செயலாளா்)

11. பி.கணேசன்: நகா் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநா் (தமிழ்நாடு சாலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா்)

12. அனில் மேஷ்ராம்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையாளா்)

13. இ.சரவணவேல்ராஜ்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் நிா்வாக இயக்குநா் (நகா் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநா்)

14. ஏ.ஜான் லூயிஸ்: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (வருவாய் நிா்வாகத் துறை இணை ஆணையாளா் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பாா்)

15. எம்.என்.பூங்கொடி: சேலம் சேகோசா்வ் நிா்வாக இயக்குநா் (மருத்துவ சேவைப் பணியாளா் கழகத்தின் உறுப்பினா் செயலாளா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT