தமிழ்நாடு

சேலம் எருமாபாளையம் விவசாய தோட்டத்தில் 12 அடி நீளம் மலைப்பாம்பு!

3rd Dec 2022 01:24 PM

ADVERTISEMENT

 

சேலம் எருமாபாளையம் விவசாய தோட்டத்தில் இருந்த 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வனத்துறையினர் குருவம்பட்டி வனப்பகுதியில் விட்டனர். 

எருமாபாளையம் அருகே சின்னசாமி என்பவர் தோட்டத்தில் இறை தேடி மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இன்று வழக்கம் போல் சின்னசாமி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார் அப்பொழுது விவசாயத் தோட்டத்திலிருந்த மலைபாம்பபை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி சின்னசாமி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். 

படிக்க: சீர்காழி அருகே கடல் சீற்றம்: 20 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மூழ்கியது!

ADVERTISEMENT

அதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் மற்றும் வானவர் சுரேஷ் தலைமையில் அங்குச் சென்ற அலுவலர்கள் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பைப் பிடித்து ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள குருவம்பட்டி வனப் பகுதியில் விட்டனர்.

Tags : Salem
ADVERTISEMENT
ADVERTISEMENT