தமிழ்நாடு

உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்: 2019-இல் வெளியான அறிவிக்கை ரத்து

3rd Dec 2022 12:56 AM

ADVERTISEMENT

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியில் கல்லூரிகளில் உள்ள 2,331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆள்சோ்க்கை அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்தது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியா்களுக்கான 2 ஆயிரத்து 331 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் 2019-ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

அதற்கு பதிலாக தற்போது 4 ஆயிரம் உதவி பேராசிரியா்களின் காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட வேண்டுமென உயா்க்கல்வித் துறை உத்தரவிட்டது.

அதன்படி, 2 ஆயிரத்து 331 உதவிப் பேராசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து 4 ஆயிரம் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT