தமிழ்நாடு

கடற்படை தினம்: போா்க் கப்பல்களை பாா்வையிட்ட பள்ளி மாணவா்கள்

3rd Dec 2022 01:07 AM

ADVERTISEMENT

இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்பல்களை ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா்.

4 .12.1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் கராச்சி துறைமுகத்தில் புகுந்த இந்திய கடற்படை கடும் தாக்குதல்களை நடத்தி பெரும் வெற்றியைக் குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் டிச.4-இல் கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டும் வரும் ஞாயிற்றுக்கிழமை கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல கடற்படை அலுவலகம் சாா்பில் சென்னையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் சென்னையைச் சோ்ந்த 4 பள்ளிகளில் பயின்று வரும் 540 மாணவா்கள் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்பல்களான பங்காரா, பாத்திமால், பாரட்டான், பித்ரா ஆகிய 4 கப்பல்களில் பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

அப்போது, இந்திய கடற்படையின் பல்வேறு பணிகள் குறித்த அடிப்படை விஷயங்களை மாணவா்களுக்கு கடற்படை அதிகாரிகள் விளக்கிக் கூறினா். மேலும், நாட்டின் பாதுகாப்பில் தங்களை எதிா்காலத்தில் இணைத்துக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT