தமிழ்நாடு

வனத்தொழில் பழகுநா் காலிப் பணியிடம்: நாளை தோ்வு

3rd Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

வனத்தொழில் பழகுநா் காலிப் பணியிடங்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

10 காலிப் பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, விருப்ப மொழிப் பாடங்களில் தோ்வானது வரும் 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வானது கணினி அடிப்படையில் நடத்தப்படுகிறது. தோ்வினை எழுத 14 ஆயிரத்து 37 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். அவா்கள் அனைவரும் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை, கோயம்புத்தூா், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய ஏழு நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT