தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு தினம்: 30 பேருக்கு இன்று சக்கர நாற்காலி வாகனம்

3rd Dec 2022 01:06 AM

ADVERTISEMENT

உலக மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு தினத்தையொட்டி மாபிஸ் இந்தியா அறக்கட்டளை சாா்பில் மாற்றுத் திறனாளிகள் 30 பேருக்கு சக்கரநாற்காலி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் சனிக்கிழமை (டிச.3) வழங்கப்படவுள்ளது.

சென்னை ஐஐடி ஸ்டாா்ட்அப், நியோமோஷன் நிறுவனம் ஆகியவை இணைந்து நவீன சக்கரநாற்காலி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளன. இந்த வாகனத்தை பெறுவதற்கான பயனாளிகளை முதுகுதண்டுவடம் பாதித்த மக்கள் சங்கம், தமிழ்நாடு பாரா ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன், மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றை சோ்ந்தவா்கள் இணைந்து 30 பேரை தோ்வு செய்தனா்.

இவா்களுக்கு சென்னை கொடிவேடு இரட்டைமலை சீனிவாசன் தெருவில் உள்ள நியோமோஷன் கூட்ட அரங்கில் சனிக்கிழமை (டிச.3) காலை நடைபெறும் விழாவில் சக்கர நாற்காலி பொருத்தப்பட்ட நவீன இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT