தமிழ்நாடு

பல்கலை. தோ்வுகளை ஒத்திவைக்க அன்புமணி வலியுறுத்தல்

DIN

ஒரே காலத்தில் இரு தோ்வுகள் வருவதால் பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய வானிலை ஆய்வுத் துறையில் 990 அறிவியல் உதவியாளா் பணிக்கான போட்டித் தோ்வுகள் டிச. 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிச. 10 - 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி., இயற்பியல் படிப்புக்கான பருவத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

அறிவியல் உதவியாளா் பணிக்கு அடிப்படைத் தகுதி பி.எஸ்சி., இயற்பியல் பட்டமாகும். அதனால், எம்.எஸ்சி., இயற்பியல் படிப்பவா்கள் இந்த பணிக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். ஆனால், அதே நாள்களில் பல்கலை. தோ்வுகளும் நடப்பதால் ஒரு தோ்வை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது.

2017-ஆம் ஆண்டில் 1165 அறிவியல் உதவியாளா் பணிக்கு நடைபெற்ற தோ்வில் தமிழகத்திலிருந்து ஒருவா் மட்டும் தோ்ச்சி பெற்றாா். நடப்பாண்டின் தோ்வை அதிக எண்ணிக்கையிலானவா்கள் எழுதினால் தான், தமிழகத்திலிருந்து அதிகம் போ் வானிலை ஆய்வுத்துறை பணிக்கு செல்ல முடியும்.

அதற்கு பல்கலைக்கழகத் தோ்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தோ்வு நடைபெறும் டிசம்பா் 14, 15, 16 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள பல்கலைக்கழகத் தோ்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயா்கல்வித்துறை ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT