தமிழ்நாடு

நீதிபதிகளையே மிரட்டுவீர்களா? பாஜக மனுதாரரை எச்சரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை

2nd Dec 2022 04:13 PM

ADVERTISEMENT

இரு சக்கர வாகனங்களில் சட்ட விரோதமாக நம்பர்  பிளேட் வைத்திருப்போர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தங்களை மிரட்டும் வகையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அனைத்து வாகனங்களில் விதி மீறி  நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும்!

அதில் மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு பிறப்பித்துள்ள முறையில் தான் நம்பர் பிளேட் இல்லாமல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் அமைக்கப்படுவதாகவும் அத்தகைய நம்பர் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 

ADVERTISEMENT

இந்த விசாரணையின்போது அரசு தரப்பு வழக்குரைஞர் திலக் குமார், மனுதாரர் சந்திரசேகர் மாவட்ட நிர்வாகத்தின் மனு கொடுக்கும் போது கோரிக்கையை மட்டும் வைக்கவில்லை. சட்ட விரோத நம்பர் போர்டுகளை அகற்றவில்லை எனில் பாரதிய  ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் மனு அளித்துள்ளார் என்பதை சுட்டி காட்டினார்.

இதையும் படிக்க | காங்கிரஸுக்கு இதேதான் வேலை, என்ன சொல்கிறார் பிரதமர்?

இதனை படித்துப் பார்த்து கோபமடைந்த நீதிபதிகள் மிரட்டும் தொனியில் மனு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம் எனவும் கண்டனத்தை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் குறிப்பிட்ட அந்த வரியை வேண்டாம் நீக்கிவிடலாம் என தெரிவித்த நிலையில் நீதிபதிகள் இதை எளிதாக கடந்து போக முடியாது என எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கில் உரிய  உத்தரவு பிறப்பிக்கவில்லையெனில் நீங்கள் வெளியே வர முடியாது என்று நீதிபதிகளை மிரட்டும் வகையில் உள்ளதை சுட்டிக்காட்டினர். 

தொடர்ந்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் போர்டுகளில் அரசு விதிமுறையின்படி அந்த வண்டியின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் விதிகளை மீறிய நம்பர் போர்டுகளை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT