தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம்: இ-சேவை மையங்கள் இரவு 8 மணி வரை செயல்படும்

DIN

குரூப் 2 தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல்  சான்றிதழ்களை  17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேவைப்படும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 2911 –ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT