தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு... வாட்ஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட்!

DIN


வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மெட்ரோ ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டை பெறும் வகையில் புதியதாக வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் பெறும் புதிய வசதியை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் பயணிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு "Hai" என்று பயணிகள் குறுந்தகவல் அனுப்பினால் 'சாட் போட்' என்ற தகவல் கிடைக்கும். 

இதில், பயணிகள் தங்களது பெயர்,  மெட்ரோ ரயில் புறப்படும் ரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அதற்குரிய பயணச்சீட்டு கட்டணத்தை வாட்ஸ் ஆப் மூலமோ அல்லது மற்ற டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். பின்னர், பயணிக்கான பயணச்சீட்டு அவர்களது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பப்படும். 

பின்னர், அதனை மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேனரில் காண்பித்து ரயிலில் பயணம் செய்யலாம். இந்த வசதி விரைவில் செயல்பாட்டு வரயிருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏற்கனவே, மெட்ரோ ரயிலில் பயணிக்க நேரடி பயணச்சீட்டு, பயண அட்டை, க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT