தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மலையேறும் பக்தர்களுக்கான நிபந்தனைகள் என்ன தெரியுமா..?

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின்போது மதியம் 2 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் வருகிற 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அன்றைய தினம் மாலையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வருகிறாா். மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகளைப் பாா்த்துவிட்டு சம்பந்த விநாயகா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அவா் வழிபடுகிறாா். இதையொட்டி, மகா தீபத் திருவிழாவன்று, 12 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபவா் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மகா தீபத் திருவிழாவன்று மதியம் 2 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் மருகேஷ் தெரிவித்துள்ளார். 

மலையேறும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு: 

மகா தீபத் திருவிழாவன்று மதியம் 2 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

நீதிமன்ற உத்தரவின்படி மலைமீது ஏற 2,500 பேருக்கு காலை 6 மணியில் இருந்து டோக்கன் வழங்கப்படும்.

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம். 

பேகோபுரம் அருகே உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி. காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து கீழே இறங்கி வரும் போது திரும்பக் கொண்டு வரவேண்டும். 

கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே நெய் ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய் தீபம் ஏற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தீபத் திருவிழாவுக்கு பெண்கள் பாதுகாப்பாக வந்து செல்லத் தேவையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது. திருட்டு போன்ற குற்றங்களைத் தடுக்க தமிழகத்தின் 38 மாவட்டங்களில் பணிபுரியும் திருட்டு தடுப்புக் காவல் அதிகாரிகள், காவலா்கள் சிறப்புப் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். புதிதாக 500 அதிநவீன கேமராக்களை அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT