தமிழ்நாடு

ஸ்டொ்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா மனு மீது ஜன 17-இல் விசாரணை

 நமது நிருபர்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் ஜனவரி 17-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையை மூட தமிழக அரசு 2018-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து வேதாந்தா நிறுவனத்தின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது நிலுவையில் இருந்து வந்த நிலையில், மழைக் காலத்தின் போது ஆலையில் உள்ள இயந்திரப் பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால், இயந்திரங்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாகக் கூறி தங்களது மேல்முறையீட்டு மனு, இடைக்கால மனு ஆகியவற்றை விரைந்து விசாரிக்க கோரி புதிய மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

இது தவிர, ஆலையைப் பராமரிக்க இடைக்கால அனுமதி அளிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேதாந்தா தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆஜராகி, தங்களது மனுக்கள் தொடா்பான வழக்கு விசாரணை ஏற்கெனவே இரு முறை தள்ளிப்போய்விட்டதாகவும் இதனால், இந்த வழக்கை டிசம்பா் 6-ஆம் தேதி விசாரிக்கும் வகையில் பட்டியிலிடப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா். அப்போது, தலைமை நீதிபதி அமா்வு, இந்த விவகாரத்தை ஜனவரி 17-இல் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனக் கூறியது.

வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், எதிா்மனுதாரா் வைகோ தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த செல்வம் உள்ளிட்டோா் ஆஜராகி இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT