தமிழ்நாடு

ஆவினில் அதிக விலைக்கு ஆரஞ்சு பாக்கெட் வாங்கும் அவலம்! பச்சை பால் பாக்கெட் கிடைக்குமா?

2nd Dec 2022 01:22 PM

ADVERTISEMENT


சென்னை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பச்சை நிற பால் பாக்கெட் கிடைப்பதை ஆவின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தி ரூ.60 ஆக விற்கப்படும் நிலையில், பச்சை நிற பால் பாக்கெட் போதுமான அளவில் கிடைக்காததால், மக்கள் கூடுதலாக ரூ.16 கொடுத்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளையே வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆவின் நிர்வாகத்துகான பாலை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கிறது. இந்த கூட்டமைப்பு, நிறை கொழுப்புடைய ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை ரூ.12 உயர்த்தியது. இதன் மூலம் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆவின் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பொருந்தும். அட்டைதாரர்கள் முந்தைய விலையான லிட்டருக்கு ரூ.46 கொடுத்தே வாங்கலாம். 

படிக்கமெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு... வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்!

ADVERTISEMENT

எனினும், விலையேற்றத்தால் தற்போது ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் அன்றாட விற்பனை, 5 சதவிகிதம் குறைந்துள்ளது. விலையேற்றத்தால் பலர் குறைந்த விலையுடைய (நிலைப்படுத்தப்பட்ட) பச்சை நிற பால் பாக்கெட் வாங்குவதே இதற்கு காரணம். 

இந்நிலையில், ஆவின் பாலகங்களில் போதிய அளவில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பலரும் கூடுதல் விலையுடைய ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை வாங்கும் கட்டாயம் ஏற்படுகிறது. 

சில ஆவின் பாலகங்களில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் குறைவாகவும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் அதிகமாகவும் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

படிக்கடிவி நிகழ்ச்சியாகிறது உக்ரைன் போர்! அதிபரைச் சந்தித்த டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்!

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சரி செய்வதற்காக கூடுதல் விலையுடைய பால் பாக்கெட்டுகளை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய பாலகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

எது எப்படியிருந்தாலும், நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையுடைய பச்சை நிற பால் பாக்கெட்டுகள் போதிய அளவில் கிடைப்பதை ஆவின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT