தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேசத் தடை

2nd Dec 2022 05:07 PM

ADVERTISEMENT

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

கடந்த 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூா், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக, தலைமைச் செயலா், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போா் இயக்கத்தின் சாா்பில் ஜூலை 22-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது. நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் அமைப்பதற்காக இந்த ஒப்பந்தத்தில் சோ்த்து திட்ட மதிப்பு அதிகப்படுத்தப்பட்டது. 

இதனால், அரசுக்கு ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுதொடா்பாக வெளியான செய்தியை அறப்போா் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. இதனால், தனக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளா் ஜாகிா் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடா்ந்துள்ளாா். 

ADVERTISEMENT

இதையும் படிக்க- ரசிகர்களை மகிழ்வித்ததா நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரைலர்? 

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT