தமிழ்நாடு

தம்மம்பட்டி சிவன் கோயில் நுழைவு வாயில் பூமி பூஜை விழா!

2nd Dec 2022 11:25 AM

ADVERTISEMENT


தம்மம்பட்டி:  சேலம் மாவட்டம், தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயில் நுழைவு வாயில், சுற்றுச்சுவர், பேவர் பிளாக்  பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.     

தம்மம்பட்டியிலுள்ள ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இக்கோயில் திருப்பணி சில மாதங்களில் நடத்திட, தம்மம்பட்டி ஊர் பொதுமக்கள், அனைத்து சமுதாய மக்கள் முடிவு செய்துள்ளனர்.  

பூமி பூஜையில் பங்கேற்ற தம்மம்பட்டி அனைத்து சமுதாயத்தினர்.  

ADVERTISEMENT

இதையும் படிக்க | ரூ.40,000 ஐ கடந்தது தங்கம் விலை! நிலவரம் என்ன?

இந்நிலையில், இக்கோயிலுக்கு 18 அடி உயர நுழைவு வாயிலும், மேற்குப் புற சுற்றுச்சுவரும், கோயிலின் வெளிப்புற தரை தளம் முழுமையும் பேவர் பிளாக் போட என சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் செய்ய தம்மம்பட்டி அனைத்து சமுதாய மக்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. 

இந்நிகழ்வில், ஊர் முக்கிய பிரமுகர்கள், தம்மம்பட்டி அனைத்து சமுதாயத்தினரும், ஊர் பொதுமக்களும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT