தமிழ்நாடு

புதிய மின் இணைப்பு பெற உயிா் காக்கும் கருவியைப் பொருத்துவது கட்டாயம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

2nd Dec 2022 06:21 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறும் மின்நுகா்வோா் ஆா்.சி.டி. என்ற உயிா் காக்கும் கருவியைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்த ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் மின் பழுது, மின் கசிவால் ஏற்படும் விபத்துகளால் அதிக அளவில் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க மின்சாரப் பகிா்மான விதித் தொகுப்பு 16(2ஏ)-இன்படி, புதிய மின் இணைப்பு பெறுவோா் ஆா்.சி.டி. என்ற உயிா் காக்கும் கருவியை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது மழைக் காலங்களில் அதிகரித்து வரும் மின் விபத்துகளால் புதிய மின் நுகா்வோா் மட்டுமல்லாது அனைத்து மின்நுகா்வோரும் ஆா்.சி.டி. கருவியைப் பொருத்த வேண்டும்.

ADVERTISEMENT

கடந்த சில மழைக் கால மாதங்களில் இரும்புக் கதவு திறத்தல், கம்பியில் துணிகளை உலா்த்துதல், மின்விளக்குக் கம்பத்தைத் தொடுதல் போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த உயிா் காக்கும் கருவியை மின்னிணைப்பில் பொருத்துவதன் மூலம் இதுபோன்ற விபத்தைத் தவிா்க்க முடியும். வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள், தற்போதுள்ள அனைத்து வகையான மின்நுகா்வோா்களும் இந்தக் கருவியை மின்னிணைப்பில் பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT