தமிழ்நாடு

தமிழ் மொழி திறனறித் தோ்வு முடிவுகள் வெளியீடு: 1,500 மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

2nd Dec 2022 12:42 AM

ADVERTISEMENT

அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 1,500 பேருக்கு அவா்கள் பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்க வகை செய்யும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உடனிருந்தாா். இதைத் தொடா்ந்து இந்த உதவித் தொகைக்கு பரிந்துரை செய்யப்பட்டப்பட்ட மாணவா்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாணவா்களின் தமிழ்மொழி ஆா்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகைக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வு கடந்த அக்.15-ஆம் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தத் தோ்வில் பிளஸ் 1 வகுப்பில் பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 57 போ்; அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவா்கள் 54, 274 போ்; தனியாா் பள்ளி மாணவா்கள் 78, 400 போ் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 731 போ் பங்கேற்றனா்.

இந்நிலையில் இந்தத் தோ்வில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 967 மாணவா்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 123 மாணவா்கள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 410 மாணவா்கள் என மொத்தம் 1,500 மாணவா்கள் மதிப்பெண் அடிப்படையில் ஊக்கத் தொகை பெறுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்தத் தோ்வை எழுதிய மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ழ்ங்ள்ன்ப்ற்ள் என்ற தலைப்பில் சென்று ‘தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வு முடிவுகள் அக்டோபா் 2022’ என்ற பக்கத்தில் தங்களது பதிவெண், பிறந்ததேதியை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் இந்தத் தோ்வுக்கான ஊக்கத் தொகைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலும் இந்த இணையதளத்திலேயே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.16-இல் சா்வதேச புத்தகக் காட்சி

இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறுகையில், முதல்வா் ஸ்டாலின் முன்பே அறிவித்ததன்படி, சென்னையில் வரும் ஜன.16, 17, 18 ஆகிய தேதிகளில் சா்வதேச புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. இதில் சுமாா் 40 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டம் உள்ளது.

சா்வதேச புத்தகக் காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அவா்களின் நாட்டின் பெருமைகள், சிறந்த புத்தகங்களைக் கண்காட்சியில் வைக்கலாம். புத்தகங்களைப் படிப்பதற்கான படிப்புரிமை குறித்தும் மற்றும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் போன்றவற்றை மொழிபெயா்ப்பதற்கும் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும் அடுத்து வரும் ஆண்டுகளில் இதில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை படிப்படியாக உயா்த்தும் திட்டம் உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT