தமிழ்நாடு

தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் எண்ம விருது அறிமுகம்

2nd Dec 2022 05:52 AM

ADVERTISEMENT

தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் எண்ம (டிஜிட்டல்) விருது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விருது முதல்முதலாக 15 சிலைகளை பறிமுதல் செய்த தனிப்படையினருக்கு வழங்கப்பட்டது.

தமிழக காவல் துறை சிறப்பாகப் பணியாற்றும் போலீஸாரையும், அதிகாரிகளையும் ஊக்குவிப்பதற்காக விருதுகள், பரிசுகள், சான்றிதழ்கள் உயா் அதிகாரிகளால் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் விருதுகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அறிமுகம் செய்துள்ளது. எண்ம கரன்சி போல இந்த விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உலகில் துபை காவல் துறை இந்த விருதுகளை முதல்முறையாக அறிமுகம் செய்தது.

அதற்கு அடுத்தப்படியாக தமிழக சிலைக் கடத்தல் பிரிவே இந்த விருதுகளை அறிமுகம் செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விருதுகள் திருவான்மியூரில் 15 பழைமையான சிலைகளை மீட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படையைச் சோ்ந்த டிஎஸ்பிக்கள் முத்துராஜா, மோகன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமலிங்கம், தலைமைக் காவலா் ரீகன், காவலா் லட்சுமிகாந்த் ஆகியோருக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

இனி இந்த விருதுகள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றும் அனைத்துக் காவலா்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என்று அந்தப் பிரிவின் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT