தமிழ்நாடு

மத்திய அரசின் விளையாட்டு விருது பெற்ற தமிழக வீரா்களுக்கு பாஜக வாழ்த்து

2nd Dec 2022 06:21 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் விளையாட்டு விருது பெற்ற தமிழக வீரா்கள், வீராங்கனைகளுக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்த அறிக்கை:

விளையாட்டு உலகில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் சிறந்த வீரா்கள், வீராங்கனைகளை ஆண்டுதோறும் மத்திய அரசு விருது அளித்து கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் விருதுகளைப் பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்.

குறிப்பாக, மேஜா் தயான்சந்த், கேல்ரத்னா விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சென்னையைச் சோ்ந்த சரத் கமல், அா்ஜூனா விருதுக்காக தோ்வு செய்யப்பட்டசெஸ் விளையாட்டு வீரா் பிரக்ஞானந்தா, கடலூரை பூா்விகமாகக் கொண்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில், மதுரையைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜொ்லின் அனிகா உள்ளிட்ட அனைவருக்கும் தமிழக பாஜக சாா்பில் நல்வாழ்த்துகள். விளையாட்டு வீரா்களுக்கும், அவா்களின் வெற்றிக்கான முயற்சிகளுக்கும் பாஜக என்றும் துணைநிற்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT