தமிழ்நாடு

பேராசிரியா் அன்பழகன் விருது: 114 அரசுப் பள்ளிகள் தோ்வு

2nd Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

தமிழக அரசு வழங்கும் ‘பேராசிரியா் அன்பழகன்’ விருதுக்கு மாநிலத்தில் சிறந்த அரசுப் பள்ளிகளாக 114 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கல்வி வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், சிறந்த கல்வியாளருமான பேராசிரியா் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியா் அன்பழகனின் திருவுருவச் சிலை நிறுவப்படுவதுடன்அந்த வளாகம் ‘பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம்’”என்றும் அழைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியா் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவா் வளா்ச்சி என பன்முக வளா்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியா் அன்பழகன் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், 2020 - 2021-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் டான் போஸ்கோ அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, வியாசா்பாடி; சென்னை தொடக்கப்பள்ளி, பாரதிதாசன் தெரு, திருவான்மியூா்; சென்னை தொடக்கப்பள்ளி, புலியூா், கோடம்பாக்கம் ஆகிய மூன்று பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதம்; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கம்பாக்கம்; ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாத்தூா் ஆகிய பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூா் மாவட்டத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி, என்ஜிஜிஓ காலனி; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூச்சி அத்திப்பட்டு; ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏனாதி மேல்பாக்கம் ஆகிய பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT