தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடக முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம்

2nd Dec 2022 05:50 AM

ADVERTISEMENT

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் விவகாரத்தை அரசியல் லாபத்துக்காகவே கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கையில் எடுத்துள்ளதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தில்லியில் மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியிருக்கிறாா். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது. விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், காவிரி ஆணையக் கூட்டத்தில் இனி எந்த காலத்திலும் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என ஆணையிட கோரி கடந்த 21-ஆம் தேதி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கா்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது அரசியல் லாபம் தேடும் நாடகம் என்பதைத் தவிர வேறில்லை என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT