தமிழ்நாடு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உள்ளிட்ட 3 பெண்கள் தற்கொலை: காரணம் என்ன?

1st Dec 2022 02:05 PM

ADVERTISEMENT


நெய்வேலி: கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், சிறுபாக்கம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உள்ளிட்ட மூன்று பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

சிறுபாக்கம் அடுத்துள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சிவகுருநாதன்(39), மங்களூரில் உள்ள அறைகலன் கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர், 2004-ஆம் ஆண்டு சென்னையில் வேலை செய்து வந்தார். அப்போது, சென்னை, போரூர், ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகரில் மிஸ்பசாந்தி வீட்டில் தங்கியிருந்தார். அச்சமயத்தில் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில், 2019-இல் சிவகுருநாதன் சொந்த கிராமமான மலையனூர் வந்துவிட்டார். மிஸ்பசாந்தி(35), மகள் அருள் ஹெலன் கிரேஸ்(8), தாய் தேபோரல் கல்யாணி(60) ஆகியோர் சென்னையில் வசித்து வந்தனர். இவர்கள் அடிக்கடி மலையனூர் வந்து சிவகுருநாதனை சந்தித்துச் செல்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்பு இல்லையாம்.

ADVERTISEMENT

கடந்த 27.11.22 ஆம் தேதி மிஸ்பசாந்தி மற்றும் மகள், அம்மா மூவரும் மலையனூரில் உள்ள சிவகுருநாதன் வீட்டிற்கு வந்தனர். இங்கேயே இருக்கப் போவதாகவும் தனியாக வீடு பார்க்க கூறியுள்ளனர். அதன்படி, தனிவீட்டில் மூன்று நாள்களாக வசித்து வந்தனர்.

புதன்கிழமை இரவு 9 மணி அளவில் சிவகுருநாதன் சாப்பாடு வாங்கிக்கொண்டு பார்க்க சென்றார். வீட்டில் யாரும் இல்லாததைத் தொடர்ந்து தேடிப் பார்த்துள்ளார். அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில், தொடர்புகொள்வதற்கு கைப்பேசியும் இல்லையாம்.

வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சாமிதுரை மகன் வேல்முருகனுக்கு சொந்தமான கிணற்றில் மூவரும் இறந்த நிலையில் கண்டறியப்பட்டனர். 

அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து தகவல் அளித்ததின் பேரில் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  மூன்று பேர் இறப்பு கொலையா? தற்கொலையா? என்று விசாரணை செய்து வருகின்றனர். 

சிவகுருநாதனுக்கு முன்னரே சுமதி என்ற பெண்ணோடு காதல் திருமணமாகி அதில் ஆர்த்தி (17), நந்தினி (8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 2016-இல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. 

இச்சம்பவம் மலையனூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT