தமிழ்நாடு

லட்சுமி யானை புதைக்கப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கானோர் மலர் தூவி அஞ்சலி !

1st Dec 2022 12:16 PM

ADVERTISEMENT


புதுச்சேரி மாநிலத்தில் உயிரிழந்த மணக்குள விநாயகர் யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி புதன்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது. யானை லட்சுமியின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்திய பின்பு நகரப் பகுதியில் உள்ள ஜேவிஎஸ் நகர் அருகே வனத்துறை அருகே உள்ள ஒரு இடத்தில் யானையின் உடல் உடல்கூறு ஆய்வுகள் செய்யப்பட்டு புதன்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதையும் படிக்க | ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை!

இந்நிலையில்,  வியாழக்கிழமை காலை யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து லட்சுமி யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

மேலும், ஒரு சில பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் ஊற்றியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

ஒரு மனிதனுக்கு எப்படி செய்வார்களோ அதுபோல் உயிரிழந்த கோயில் யானைக்கும் பொதுமக்கள் பால் ஊற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT