தமிழ்நாடு

வேதாந்தா அலுமினிய பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் ஒடிசா முதல்வர்!

PTI

வேதாந்தா லிமிடெட் மூலம் அமைக்கப்படும் மாபெரும் அலுமினிய பூங்காவிற்கு ஒடிசா முதல்வர் நவீன பட்நாயக் அடிக்கல் நாட்டினார். 

மேக் இன் ஒடிசா 2022 மாநாட்டில் வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் முன்னிலையில் முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

ஜார்சுகுடாவில் 253 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேதாந்தா அலுமினிய பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய உலோக பூங்காக்களில் ஒன்றாக இருக்கும் என்று அகர்வால் கூறினார். 

இந்த திட்டம் வேதாந்தா அலுமினியம் மற்றும் ஒடிசா தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியாகும். 

வேதாந்தா அலுமினியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஷர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், 

இந்த பூங்கா உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை வசதியாகவும், அங்கு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி அலகுளை அமைக்கலாம் மற்றும் ஜார்சுகுடாவில் உள்ள வேதாந்தாவின் ஸ்மெல்ட்டரில் உலோகத்தை உருக்கிப் பிரித்தும் எடுக்கலாம். 

ஜார்சுகுடாவில் உள்ள வேதாந்தாவின் அலுமினியம் உருக்காலை, ஆண்டுக்கு 1.75 மில்லியன் டன்கள் கொள்ளளவு கொண்ட உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றாகும்.

பல ஆண்டுகளாக, வேதாந்தா 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து 5 லட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதார வாய்ப்புகளை மாநிலத்தில் உருவாக்கியுள்ளது.

இப்போது வேதாந்தா அலுமினியப் பூங்கா, ஒடிசாவுக்கு அதிக மதிப்பைக் கூட்டி, மாநிலத்தில் தொழில் மயமாக்கலை மேலும் ஆழப்படுத்துவதற்கு கீழ்நிலை வீரர்களைக் கொண்டு வரும் என்று அகர்வால் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT