தமிழ்நாடு

மிஷன் சென்னை திட்ட வாகனத்தைத் தொடக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

DIN

சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மிஷன் சென்னை என்ற திட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கி, சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் "மிஷன் சென்னை " என்ற திட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே-2020 முதல் மார்ச்-2021 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 22 விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார்கள். 

அதனைத் தொடர்ந்து, ஏனைய 1,219 பணியாளர்களுக்கும் அந்தந்தப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர்  சா.சி.சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் "மிஷன் சென்னை" என்ற திட்ட வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

 மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகம் மற்றும் அனைத்துப் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்திட சிஎஸ்ஆர் திட்டம் - ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும். மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த "மிஷன் சென்னை" என்ற திட்டத்தின் வாயிலாக இரண்டு பயிற்சி மையத்தில், தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு சம்பந்தமாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT