தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா ஆரம்ப கொடியேற்றம்!

1st Dec 2022 01:52 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் லெட்சுமாங்குடி கிறிஸ்து அரசர் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆரம்பக் கொடியேற்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய திருச்சபை திருச்சி, தஞ்சை திருமண்டலம் திருவாரூர் சேகரத்திற்குட்பட்ட, லெட்சுமாங்குடி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற விழாவிற்கு, சேகர செயலாளர் பீ.அறிவழகன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர்.ஜோசப் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆலய நிர்வாகி பி.ஜான் பீட்டர் வரவேற்றார். 

விழாவில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கான ஆரம்ப விழாவை முன்னிட்டு, சேகர ஆயர் டி.சார்லஸ் தேவராஜ் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து அவர் கூறியது. கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கத் தரிசி மூலமாக, இஸ்ரேல் மக்களுக்காக வெளிப்படுத்திய தரிசனங்களில் முக்கியமானது மேசியாவின் பிறப்புச் செய்தியாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கி.மு. 700 ஆண்டுகளுக்கு முன்னர் என சொல்லப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இயேசுவின் பிறப்பு உலக வரலாற்றிலே ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டு வந்தது. மேலும், அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரேல் மக்களை மீட்டெடுத்த புதிய தொடக்கமாய் அமைந்தது. அதன் கொண்டாட்டமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழாவிற்காக கொடியேற்றப்பட்டுள்ளது.வரும் 19 ஆம் தேதி திங்கள்கிழமை , மாலை லெட்சுமாங்குடி ஆலயத்தில் குடும்பத்தாருடன் கீத வழிபாடும், 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று, பிரசங்கம், வழிபாடு நடைபெறும். 

தொடர்ந்து, 2023, ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு, விடியற்காலை 4.30 மணிக்கு பழைய மற்றும் புது வருட உடன்படிக்கை ஆராதனையும், விருந்தும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு கிறிஸ்துமஸ், புதிய ஆண்டுக்கான கலை நிகழ்ச்சியும் நடைபெறும் என்றார். கொடியேற்ற விழாவில், கமிட்டி உறுப்பினர் அருள்தாஸ் மற்றும் மரக்கடை, சின்ன கூத்தாநல்லூர், பனங்காட்டாங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT