தமிழ்நாடு

அடுத்த 4 நாள்கள் எப்படி இருக்கும்? பனி வந்தா மழை வராது என்ற பேச்சைத் தூக்கிப் போடுங்க

DIN


சென்னை: இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு கிழக்கிலிருந்து வரும் காற்று, தமிழகத்துக்கு மழையைக் கொண்டு வரும் என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

தமிழ்நாடு வெதர்மேன் இன்று பதிவிட்டிருப்பதாவது, கிழக்கிலிருந்து அடிக்கும் காற்று தமிழகத்துக்கு மழையைக் கொடுக்கும். பொதுவாக பிற்பகல் முதல் இரவு வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், இரவு முதல் காலை வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பாக அமையும்.

தமிழகத்தின் மேற்குப் பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும் அடுத்த 3 நாள்களுக்கு மழை உண்டு.

இன்று முதல் நாளை காலை வரை டெல்டா முதல் தூத்துக்குடி வரை மழைக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. குறிப்பிட்ட எந்த மாவட்டத்தையும் சொல்ல முடியாமல், பரவலாக மழைக்கான வாய்ப்பு தென்படுகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைப் பொறுத்தவரை அடுத்த 3 அல்லது 4 நாள்களுக்கு, திடீர் திடீரென மழை பெய்யலாம். குறிப்பாக சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நன்றாகவே இருக்கிறது மழைக்கான வாய்ப்பு. 

பனி வந்துடுச்சி. மழை வராது என்ற பேச்சுக்களை எல்லாம் தூக்கிப் போடுங்க. அடுத்த 3 அல்லது 4 நாள்களுக்கு நல்லா மழை பெய்யும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். பிறகு காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து கவனித்து அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

அடுத்த 4 நாள்களுக்கு கட்டாயம் குடை எடுத்து வாருங்கள். திடிரென மழை பெய்யும் எனவே. குடை கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT