தமிழ்நாடு

திருச்செந்தூா் விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று செல்லும்

1st Dec 2022 05:00 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூா் செல்லும் விரைவு ரயில் 6 மாதத்துக்கு சோதனை அடிப்படையில் தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக செல்லும் திருச்செந்தூா் விரைவு ரயில் (வண்டி எண். 16105) தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் டிச.3 முதல் வரும் ஜூன் 3-ஆம் தேதி வரை (6 மாதம்) சோதனை அடிப்படையில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூரில் மாலை 4.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பாபநாசத்துக்கு இரவு 10.11 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக இயக்கப்படும் ரயில் (வண்டி எண்.16106) இரவு 7.10 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு காலை 3.56 மணிக்கு பாபநாசத்தில் நின்று செல்லும். இந்த ரயில் ஒரு நிமிடம் மட்டுமே பாபநாசத்தில் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT