தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு!

1st Dec 2022 01:03 PM

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். 8-ம் தேதியை ஒட்டிய தமிழக-புதுவை கடலோரப் பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

ADVERTISEMENT

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 

படிக்க: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் இணைந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு

டிச.4ல் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT