தமிழ்நாடு

மதுரையில் பள்ளிகளுக்கிடையேயான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்!

DIN

மதுரை கோச்சடை தனியார்  பள்ளியில் அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கலை மேம்பாட்டுத் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 

வெற்றி பெற்ற 100 பேரை இஸ்ரோவிற்கு குயின் மீரா பள்ளி நிர்வாகத்தினர் இலவசமாக அழைத்துச் செல்கிறார்கள் 

மதுரை தனியார் பள்ளி சார்பில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 தினங்கள் பள்ளி வளாகத்தில் நடந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. என மொத்தம் 200 பள்ளிகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல், சிலம்பம், நடனம், பாட்டு, ஓவியப்போட்டி, மாறுவேட போட்டி உள்ளிட்ட 25 தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

போட்டிகளின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைவர் டாக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் அப்துல்கலாம் விஷன் 2020 அமைப்பின் தலைவர் திருச்செந்தூரான், செல்லமுத்து அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். 

இந்த போட்டிகள் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், வருடம் தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் அதிகளவிலான பள்ளிகளில் இருந்து சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவ மாணவிகள், கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இதுபோல் அடுத்த வருடத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் 500 மாணவ, மாணவிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT