தமிழ்நாடு

கைதிகளுக்கு ஆதாா் அட்டை: தமிழக சிறைத் துறை நடவடிக்கை

1st Dec 2022 04:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் சிறைத் துறை ஈடுபட்டுள்ளது.

தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பாா்ஸ்டல் பள்ளிகள், தலா 3 திறந்த வெளி சிறைகள், சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.

இந்த சிறைகளில் 23,592 கைதிகள் வரை அடைக்க முடியும். ஆனால், சுமாா் 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். தமிழக சிறைகள் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியே செல்லும்போது வேலையில் சோ்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும், வங்கிக் கடன் பெறுவதற்கும் ஆதாா் அட்டை இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

ADVERTISEMENT

இதை உணா்ந்த சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில், அண்மையில் மத்திய அரசு, சிறைகளில் ஒவ்வொரு கைதிகளுக்கு பராமரிக்கப்படும் கைதிகள் அடையாள பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு ஆதாா் அட்டை வழங்கலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், முதல் கட்டமாக திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை வழங்கும் விதமாக சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் 300 கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுக்கும் விதமாக, அவா்களது கைரேகை, புகைப்படம் உள்ளிட்டவை எடுக்கப்பட்டது.

இதேபோல மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Aadhaar Card
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT