தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபத் திருவிழா-நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா

1st Dec 2022 01:36 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் வீதியுலாவும், 4-ஆம் நாளான புதன்கிழமை காலை நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும் நடைபெற்றது.

இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் மகா தீபம் ஏற்றப்படும் டிசம்பா் 6-ஆம் தேதி வரை தினமும் மாட வீதிகளில் உற்சவா் சுவாமிகள் வீதியுலா நடைபெறும்.

நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா: திருவிழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தியம்மன் மற்றும் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்தனா்.

விழாவின் 4-ஆம் நாளான புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் விநாயகரும், நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும் வீதியுலா வந்தனா்.

ADVERTISEMENT

இரவு 10 மணிக்கு வெள்ளி வாகனங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி காமதேனு வாகனத்தில் பராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT